ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்கள் சிட்னியில் சந்தித்து பேசினர்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷான், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை.
இருவருக்குமிடையிலான சந்திப்பில் புதிய தொழில் நுட்பங்களை பரிமாறிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, நியூசிலாந்தின் பழங்குடி மக்கள் தொடர்பான பல புதிய முடிவுகளை எடுத்துள்ளார்.
புகைபிடித்தல் தடையும் அவற்றில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலின் போது, நியூசிலாந்து பிரதமரின் உள்ளகத் தீர்மானங்கள் குறித்து தாம் கருத்து வெளியிடுவதில்லை என அவுஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.