Newsதுவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல் - எடுக்கப்படவுள்ள முடிவுகள்

துவாரகா போன்று காணொளி வெளியிட்டவர்களுக்கு சிக்கல் – எடுக்கப்படவுள்ள முடிவுகள்

-

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21.12.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த காணொளி தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய அந்த காணொளி தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest news

பழங்குடி மக்களிடையே Covid-19 மற்றும் Influenza இறப்புகள் அதிகரிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் COVID-19 மற்றும் Influenza-ஆல் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை பழங்குடி ஆஸ்திரேலியர்கள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோய்கள் / நீரிழிவு மற்றும் இதய...

புலம்பெயர்ந்த குற்றவாளிகளை வேறு நாட்டிற்கு நாடு கடத்த அரசாங்கம் முடிவு

இந்த நாட்டின் தெருக்களில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டில் பிறந்த குற்றவாளிகளை நவ்ருவுக்கு நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பசிபிக் தீவு...

டிரம்பின் வரிகள் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், சீனா,...

Pet Friendly விமான வசதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வரவேற்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்படவுள்ள Pet Friendlyபு விமானங்களுக்கு ஆஸ்திரேலியர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். புதிய அறிமுகத்திற்கு பலர் நேர்மறையாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய சேவை நல்ல யோசனை...

மெல்பேர்ணில் இன்று நடைபெறும் போராட்டங்கள் குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

மெல்பேர்ணில் இன்று திட்டமிடப்பட்டுள்ள போராட்ட பேரணியில் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்யுமாறு விக்டோரியா காவல்துறை போராட்டக்காரர்களை வலியுறுத்துகிறது. மெல்பேர்ணின் வடகிழக்கில் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் தேசி ஃப்ரீமேனைக்...

Pet Friendly விமான வசதிகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வரவேற்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்படவுள்ள Pet Friendlyபு விமானங்களுக்கு ஆஸ்திரேலியர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். புதிய அறிமுகத்திற்கு பலர் நேர்மறையாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய சேவை நல்ல யோசனை...