அவுஸ்திரேலியாவில் உதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிறிஸ்துமஸில் கூடுதலாக 7,000 பேருக்கு உணவு தேவைப்படுவதாக விக்டோரியாவில் உள்ள உணவு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிவாரணம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சால்வேஷன் ஆர்மியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன பலருக்கு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதாகவும், நிவாரணம் தேவைப்படுவதற்கு முதன்மையான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.