Newsமுதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

-

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் திகதி முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்யாவில் ஜனவரி மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷ்ய கண்டத்தில் உள்ள உக்ரைனும் ரஷ்யாவின் பாரம்பரிய விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தது.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் எதிரொலியாக உக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு ஜனாதிபதி வெலாடிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய பாரம்பரிய முறையைத் தவிர்த்து மேற்கத்திய அல்லது கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடினர்.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி டிசம்பர் 24ம் திகதி அறிவித்திருந்தார். அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ”அனைத்து உக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

100 ஆசிரியர் அல்லாத வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ள NSW மாநிலம்

TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

Wood Heater புகையால் ஏற்படும் மரணங்கள் பற்றி வெளியான அறிக்கைகள்

குளிர்காலத்தில் ஆஸ்திரேலிய வீடுகளில் Wood Heater நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிலிருந்து வெளியாகும் புகை, சுகாதார எச்சரிக்கைகளையும், அண்டை வீட்டாருக்கு இடையே தகராறுகளையும் ஏற்படுத்துவதாகக்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய மணமகன்

மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் படுகாயமடைந்துள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter Valley பகுதியில் உள்ள Mount View சாலையில் அவரும் அவரது...