Breaking Newsசாலை விபத்து இறப்புகளை 50 சதவீதத்தால் குறைக்க திட்டம்

சாலை விபத்து இறப்புகளை 50 சதவீதத்தால் குறைக்க திட்டம்

-

2030ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஐம்பது சதவீதம் குறைப்பதே இலக்கு என்று ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.

அந்த நோக்கத்திற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி கூறுகிறார்.

குறிப்பாக அங்கு மருத்துவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாலை விபத்துகளில் கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீவன்சன், அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு வேகமே காரணம் என்கிறார்.

சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கிய போதும் அது நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன ஓட்டிகளின் வேகம், களைப்பு, மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவற்றைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை அடைய முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...