செஞ்சிலுவைச் சங்கம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் மையங்களுக்கு தேவையற்ற பரிசுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறது.
ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 170 மையங்கள் இருப்பதாக ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
சேகரிக்கப்படும் பரிசுகள் ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக விநியோகிக்கப்படும்.
தேவையற்ற கிறிஸ்துமஸ் பரிசுகளை ஒப்படைக்குமாறு ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை உதவி அதிகாரி ஜேசன் லாஃபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவ்வாறான நிலையில் அவர்களுக்கு உதவுவது அவர்களின் பொறுப்பு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.