விக்டோரியாவில் உள்ள வெரிபீ ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண்ணையும் அவரது நாயையும் பேரிடர் மேலாண்மை பிரிவுகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வெர்ரிபீ ஆற்றுக்கு அருகில் சிறுமி தனது செல்லப் பிராணியுடன் பொழுதைக் கழித்த போது நாய் நீரில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியும் ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் கரைக்கு வர முடியாத நாயைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
இருப்பினும், தண்ணீரில் சிக்கிக் கொண்டதால், இருவரும் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு கிளையில் ஓய்வெடுக்க முயன்றனர்.
அவசர சேவை அழைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, 15 நிமிடங்களுக்குள் அவர்களை மீட்க பேரிடர் மீட்புப் பிரிவுகளால் முடிந்தது.
இந்த நாட்களில் தண்ணீர் சம்பந்தப்பட்ட இடங்களில் மக்கள் நடமாடினால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என உயிர் பாதுகாப்பு துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.