Newsஅமேசான் நீர்நிலையில் சிக்கிய அரிய வகை மீன்

அமேசான் நீர்நிலையில் சிக்கிய அரிய வகை மீன்

-

பொலிவியாவை அண்மித்த அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை மீன் சிக்கியுள்ளது.

பைசே (paiche) என அழைக்கப்படும் இம்மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.

நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீற்றர் (12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.

எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் பைசே வகை மீன்கள், கூட்டம் கூட்டமாக வரும் பிற சிறிய மீன் வகைகளை உணவாக உட்கொள்கின்றன.

இவ்வகை மீன்கள் இருக்கும் இடங்களில் பிற வகை மீன்கள் வாழ்வது அரிதாவதால் உயிரியல் ஏற்றத்தாழ்வுக்கு இவை காரணமாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்மீன், பெரு நாட்டில் உள்ள மீன் பண்ணைகளில் உற்பத்தியாகி பொலிவியா நீர்நிலைக்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

பைசேவிற்கு அதன் வாழ்நாளில் வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ வரை எடை கூடும். அரிதான பைசேவின் இனம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...