Newsஅவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

-

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தற்காலிக உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இரு அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாஹ் செயற்பாட்டாளர் என தெரியவந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதன்படி அவுஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கான திட்டங்களை தயார் செய்ய முடியும் எனவும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலும் தாக்குதல்கள் நிகழலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக பதில் உள்ளக அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...