ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு தினமும் ஒன்பதாயிரம் யூனிட் ரத்தம் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
இந்த தேவை ஜனவரி 2 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் கேத் ஸ்டோன் கூறுகையில், நாளொன்றுக்கு 1200 ரத்த தானம் செய்பவர்களிடம் இருந்து ரத்தம் சேகரிப்பது அவசியம்.
வழக்கமான இரத்த தானம் செய்பவர்கள் விடுமுறைக்காக பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளமையினால் இரத்தத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆஸ்திரேலியர்கள் முடிந்த அளவு ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.