பாலியில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென எழுந்த பயணி சப்தத்தை உயர்த்தி சபித்து மேலும் பல பயணிகளை தாக்க முயன்றதாக குவாண்டாஸ் விமான ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊழியர்களையும் மிரட்டும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், பணியாளர்களும் பயணிகளும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி விமானத்தின் நடுவில் பல மணி நேரம் தரையில் வைத்திருந்தனர்.
சந்தேக நபர் மெல்போர்ன் விமான நிலையத்தில் மத்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.