மோசமான வானிலை விக்டோரியாவின் பல பகுதிகளை பாதித்துள்ளது.
கனமழையுடன் பனிப்பொழிவும் பெய்து வருவதாகவும், மணிக்கு நூற்றி நான்கு கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை விக்டோரியாவின் வடக்கு, மத்திய, வடமத்திய மற்றும் கிப்ஸ்லேண்ட் ஆகிய மாவட்டங்களை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதிகளில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
விக்டோரியாவின் பல பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் விமான நிலையத்தில் மோசமான வானிலையின் தாக்கம் காரணமாக பல விமானங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.