அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதி பில்லி ஹம்ப்ரே-ஈவ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவத்துக்காக கடந்த மாதம் 31ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து இரவு 11.48 மணிக்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் 40 நிமிட இடைவெளியில் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுபோன்று குரேஷியா நாட்டில் ஒரு பெண்ணுக்கு டிசம்பர் 31ஆம் திகதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், 2 நிமிடம் கழித்து ஜனவரி 1ஆம் திகதி 12.01 மணிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.