ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நேற்று (05) காலை வரையில் 92ஆக உயா்ந்துள்ளது.
நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.
இந்நிலநடுக்கத்தால் இஷிகாவாவில் 13 நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 370 நிவாரண மையங்களில் மொத்தம் 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து 10க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 242 போ் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புகளில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நன்றி தமிழன்