மியன்மார் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 9,652 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்றில் கடந்த 4ம் திகதி தெரிவிக்கப்பட்டதாவது:
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 சிறைக் கைதிகளுக்கு இராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 114 வெளிநாட்டினரையும் விடுதலை செய்ய அவா் உத்தரவிட்டுள்ளாா் என செய்தி வெளியிட்டுள்ளது.