Newsவாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

-

ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர், காஸா- வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளதாகவும் பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்டின் கிரிஃபித்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாவது:

பலஸ்தீனர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் இதுவரை எங்குமே பதிவு செய்யப்படாத பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் இத்தனை இடர்களைச் சந்தித்து வருகின்றனர். உலகம் அதனை பார்த்து கொண்டிருக்கிறது.

ஐ.நா மனிதத்துவ விவகார பிரிவின் தலைவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியாவது குறித்தும் திறந்தவெளியில் மாறுபாடுகளுடனான வெப்பநிலையில் மக்கள் தங்கியிருப்பது குறித்தும் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளார்.

குறைவான வைத்தியசாலைகளே செயல்பாட்டில் உள்ளன. தொற்று நோய்கள் பரவியுள்ளதுடன், மருந்து பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில் 180 குழந்தைகள் புதிதாகப் பிறக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், ஐ.நா உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான நேரம் இது என வலியுறுத்தியுள்ளார்.

மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...