Newsகின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

கின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

-

டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, 828 மீற்றர் உயரமுடையது. இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது.

உலகின் தலைசிறந்த நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிஃபாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா, இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கவுள்ளது.

அதாவது, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது நிர்மானிக்கப்பட்டு வரும் கிங்டம் டவர் கட்டிடம் முழுமையடைந்தவுடன், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை விட உயரமானதாக அமையவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. இதன் உயரம் 1,000 மீட்டருக்கும் மேல் இருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டிடம் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களால் விக்டோரியா அரசுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு

மெல்பேர்ணின் CBD-யில் வாராந்திர பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை ஒடுக்க விக்டோரியா காவல்துறை சுமார் $25 மில்லியன் செலவிட்டதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை விக்டோரியன்...

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 வரையிலான 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2025...

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 வரையிலான 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2025...

ஆஸ்திரேலியர்களின் அன்றாட வாழ்க்கை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியர்களின் அன்றாட வாழ்க்கை குறித்த புதிய அறிக்கையை மெல்பேர்ண் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கை, சமூக உறவுகள்,...