ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் 126 பேர் பலியாகியுள்ள நிலையில், 124 மணி நேரத்திற்கு பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் வாழ்ந்துவருகிற மூதாட்டியே இவ்வாறு 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். இருப்பினும் நிலநடுக்கத்தின்போது கொதிநீர் பட்ட காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாலை மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையும் பனிப்பொழிவும் இன்னும் மீட்பு பணிகளைச் சிக்கலாக மாற்றியுள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ள நிலையில், விமானங்கள் மற்றும் படகுகள் மூலமான மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
வடகொரியாவின் அனுதாபம் ஜப்பானுக்கு கிடைத்துள்ளதுடன் அமெரிக்கா ஜப்பானுக்கு உதவ முன்வந்துள்ளது.
நன்றி தமிழன்