அவுஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டுவோரின் செலவு சக்தி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிக வரி விகிதங்கள் மற்றும் அடமானக் கொடுப்பனவுகள் அவற்றின் நிலையான செலவுகளை அதிகரித்துள்ளன என்று KMPG தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் பிரெண்டன் ரியான் கூறுகிறார்.
அது அவர்களின் செலவு செய்யும் சக்தியை குறைப்பதற்கான காரணியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களின் ஊதியம் அதிகரிக்கவில்லை.
அதனால், கடந்த 3 ஆண்டுகளுக்குள் செலவு செய்யும் திறன் வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் வரவிருக்கும் வரி சீர்திருத்தம் அவர்களின் பொருளாதாரத்தை கொஞ்சம் ஸ்திரப்படுத்தும் என்று டாக்டர் பிரெண்டன் ரியான் சுட்டிக்காட்டுகிறார்.