Cinemaவிருதுகளை குவித்த 'Oppenheimer’ திரைப்படம்

விருதுகளை குவித்த ‘Oppenheimer’ திரைப்படம்

-

ஆஸ்கர் விருது போன்று ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் சாதனை படைத்த படங்களுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இவ்வாண்டு ‘Hollywood Foreign Press Association’ சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

கோல்டன் குளோப் விருது முழு பட்டியல்:

சிறந்த திரைப்படம் – ஓபன்ஹெய்மர்

சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த நடிகை – லிலி கிளாட்ஸ்டோன் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த நடிகர் – சிலியன் மர்ஃபி (ஓபன்ஹெய்மர்)

சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ நகைச்சுவை) – புவர் திங்ஸ்

சிறந்த திரைக்கதை – அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த நடிகை (மியூசிக்கல்/ / நகைச்சுவை) – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ / நகைச்சுவை) – பால் ஜியாமெட்டி (த ஹோல்டோவர்ஸ்)

சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த துணை நடிகை – டாவின் ஜாய் ராண்டால்ஃப் (த ஹோல்டோவர்ஸ்)

சிறந்த டிவி தொடர்(நாடகம்) – சக்ஸசன்

சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்// நகைச்சுவை) – தி பியர்

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) – லுட்விக் யோரன்ஸோன் (ஓபன்ஹெய்மர்)

சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத) – அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த பாடல் – ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ (பார்பி – பில்லீ எலீஷ்)

சிறந்த அனிமேஷன் படம் – ‘த பாய் அண்ட் த ஹெரோன்

சிறந்த வசூல் சாதனை படம் – பார்பி

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...