Newsவட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய வசதி

வட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய வசதி

-

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய விசயங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அதன்படி, பல வண்ணங்களுடன் புதிய தீம்களுக்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பச்சை, நீலம், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 5 வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பயனாளர்கள் அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அவர்களுடைய செயலியில் காணப்படும் வண்ணத்தில் இருந்து தேவையான வண்ணத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த புதிய மாற்றங்களால், பின்னணி பார்ப்பதற்கு வண்ண மயத்துடன் இருக்கும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட வண்ணங்களை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இவ்வசதி அமையும்.

மேலும், ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட சாட்டிங் வரலாறு ஆகியவற்றை இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு பகுதியில் வைத்து கொள்ளும் வசதியை முடிவுக்கு கொண்டு வர வட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

இதனால் கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வட்ஸ்அப் தரவுகள், 15 ஜி.பி. என்ற சேமிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படும் அல்லது பயனாளர்கள், கூகுள் ஒன் சந்தாதாரர்களாகும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.

நன்றி தமிழன்

Latest news

400,000 வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம்

ஒரு ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம் அதன் 400,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ முடியாது...

Sunshine Coast குழந்தைகள் முகாமில் உள்ளாடைகளைத் திருடிய இளைஞர்

Sunshine Coast முகாமில் குளியலறையைப் பயன்படுத்தும் குழந்தைகளை உளவு பார்த்து, அவர்களின் உள்ளாடைகளைத் திருடிய 21 வயது இளைஞர் மீது 28 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த...

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

சிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் . காலை...

ஆஸ்திரேலியா முழுவதும் பரவ தொடங்கியுள்ள RSV வைரஸ்

குளிர்காலத்தில் பரவும் RSV வைரஸ், நாடு முழுவதும் மீண்டும் பரவி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டை...