Sportsசிட்னி மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்

சிட்னி மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்

-

டேவிட் வோனர் ஹெலிகொப்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் தற்போது 2024 ஆடவர் பிக்பேஷ் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. அதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி வருகிறார்.

அத்தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள தன்னுடைய சகோதரர் திருமணத்திற்கு டேவிட் வோர்னர் சென்றார்.

அந்த விழாவுக்கு சென்ற வோர்னர் மாலை 5 மணிக்குள் முதல் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அதனால் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக ஒரு ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுத்த வோர்னர் அங்கிருந்து பறந்து தாம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி விடைபெற்ற சிட்னி மைதானத்தில் இறங்கினார்.

அவர் தரை இறங்கியது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் இதர வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Latest news

நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள பணியிடத் தொழிலாளர்கள்

செயற்கைக் கல் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதுபோன்ற சூழல்களில் பணிபுரியும் ஐந்து...

வேலைநிறுத்தம் செய்ய உள்ள குயின்ஸ்லாந்து ஆசிரியர்கள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 48,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். குயின்ஸ்லாந்தின் 1266 அரசுப் பள்ளிகள் மற்றும் 560,000...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நாயின் அளவுள்ள எலி

ஆஸ்திரேலியாவின் Normanby-இல் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள பெரிய எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. மேலும் இந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

விக்டோரியன் நீதித்துறை மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்

Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது. ஒக்டோபர் 2023 இல் நடந்த...

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட iPhone” – டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான சமீபத்திய iPhone-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகிறார். நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வெளியிடுவதற்காக நடைபெற்ற...