News8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் - எலான் மஸ்க்

8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் – எலான் மஸ்க்

-

எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை தயாரித்துள்ளது. 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ரொக்கெட்டுக்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ரொக்கெட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.

பின்னர் தவறுகள் சரிசெய்யப்பட்டு நவம்பர் மாதம் மீண்டும் சோதனை செய்யப்பட்ட போது விண்கலம் தனியாக பிரிந்தபிறகு, பூஸ்டர் வெடித்து சிதறியது.

இதையடுத்து தவறுகள் சரி செய்யப்பட்டு, மூன்றாவது சோதனையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய எலான் மஸ்க், மூன்றாவது ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிகரமாக அமையும் என்றார்.

மேலும், தனது நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்றும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கு நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...