தமிழரசுக்கட்சிக்கான தலைமை பதவிக்கான தேர்தலின் பின்னர் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக் கட்சிக்கும் ஏற்படும் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கான போட்டி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய நீக்கத்தை தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் பட்சத்தில் 2003 ஆம் ஆண்டு ஆனந்த சங்கரி விடுதலைக்கூட்டணியோடு தனியே சென்றதினைப் போன்று மீண்டும் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காத இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழ் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் இவ்வாறான அரசியல் போட்டிகளுக்கு செல்லக்கூடாது என்றும், இந்த போட்டிகள் தமிழர்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.