பாலியல் ஆரோக்கியத்திற்காக டேட்டிங் செயலியைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இளைஞர் சமூகத்தினரிடையே சிபிலிஸ், கொனோரியா மற்றும் கிளமிடியா ஆகியவை பரவி வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்த புதிய முறை பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சமூக ஊடகங்கள் மற்றும் ஆப் மூலம் பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்து இளம் சமூகத்திற்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.