Newsஉருகும் பனிப்பாறை - அதில் உருவாகும் உருவங்கள்

உருகும் பனிப்பாறை – அதில் உருவாகும் உருவங்கள்

-

அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பூமியின் தென் துருவத்தில் உள்ள அந்தாட்டிக்கா (Antarctica), முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் கண்டமாகும். இங்கு மனிதர்கள் வசிப்பதில் கடினமாக இருப்பினும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகினறனர்.

இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியதாக ஏ23ஏ (A23a) உள்ளது. 1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.

சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கியுள்ளது.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest news

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வீட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

ஈஸ்டர் விடுமுறை காலத்தில் வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது. விக்டோரியாவில் மட்டும்,...

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

2.7 மில்லியன் ஆஸ்திரேலியர்களைப் பாதித்துள்ள ஒரு நோய்

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய அறிக்கை, ஆஸ்திரேலியாவில் ஒரு தொற்றுநோய் போல பரவி வரும் ஒரு நோயை வெளிப்படுத்தியுள்ளது. நாள்பட்ட சிறுநீரக நோய் குறியீட்டின்படி, 2.69 மில்லியன்...