Destination Australia திட்டத்தின் கீழ், 2024 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 550 உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு $15,000 வரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
1 முதல் 4 ஆண்டுகள் வரை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Destination Australia 2024 திட்டம் ஆஸ்திரேலியாவின் பிராந்திய மற்றும் தொலைதூர பகுதிகளில் கல்வித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச மாணவர்கள் உயர்தர கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஒரு சிறப்பு அம்சமாகும்.
முப்பத்திரண்டு அவுஸ்திரேலிய கல்வி வழங்குநர்கள் 551 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க இணங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை அவுஸ்திரேலிய கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும்.