Newsகூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

கூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

-

உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2023 ஜனவரி மாதம், சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

“இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியதாயினும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது” என கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நமது இலட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

அவசியமில்லாத சில பணிகள் நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

இந்நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை(layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளன.

சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

வெப்பமான காலநிலைக்கு தயாராகுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை!

இந்த வாரம், அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலைக்கு தயாராக இருக்குமாறு வானிலை திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து...

குழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையானது குழந்தைகள் என்ன என்ன தங்கள் மூக்கில் நுழைத்துக்கொள்கின்றனர் என்பது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை...

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

NSW ஓட்டுனர்கள் பற்றி வெளியான அதிர்ச்சியான தகவல்

NSW ஓட்டுனர்களில் 10 பேரில் ஒருவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Driving High...