குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இன்றும் நாளையும் சூறாவளி அபாயம் உள்ளதாக வானிலை எச்சரித்துள்ளது.
சூறாவளி நிலையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சுமார் 40,000 வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
15,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
எனினும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கிய சூறாவளியை விட இம்முறை அதிக ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.