மெல்போர்னின் மவுண்ட் மார்த்தா மலைப் பாறைகளில் இருந்து கடலில் குதிப்பது ஆபத்தானது என உயிர்காக்கும் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மவுண்ட் மார்த்தா சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.
அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாறைகளில் ஏறி கடலில் குதிப்பது வழக்கம்.
ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்று உயிர் காக்கும் குழுக்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் இளம் பெண்ணொருவர் கடலில் இருந்தபோது பாறையில் இருந்து ஒருவர் மீது பாய்ந்ததில் அவரது முதுகு தண்டுவடம் சேதமடைந்தது.
இதற்கு முன் பல விபத்துகள் நடந்துள்ளன.
அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என மவுண்ட் மார்த்தா லைஃப் சேவிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.