Newsராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நித்யானந்தாவுக்கு அழைப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நித்யானந்தாவுக்கு அழைப்பு

-

சுவாமி நித்யானந்தா ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக நித்யானந்தா அறிவித்து இருந்தார். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவரவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்.”

“முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்,” என குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஓட்டுனர், 2020-ம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஜனவரி 22 மதியம் நடைபெறுகிறது. ஜனவரி 23-ம் திகதியில் இருந்து ராமர் கோவில் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...