Newsகொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும்...

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும் WHO

-

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரோன் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இலங்கை மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசியால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், புதிய நோய் தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நாடுகள் மே மாதத்திற்குள் ஒரு புதிய தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அனைத்து நாடுகளில் புதிய தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. டிசீஸ் எக்ஸ் (Disease x) என்று குறிப்பிடும் புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய நோயாகும். இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருங்கள். கொரோனா தொற்றின்போது பல உயிர்கள் இழந்தோம். அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், போதுமான ஒக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் இல்லை. அதேபோல, அனைத்து நாடுகளிலும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இது அனைத்து நாடுகளிலும் ஒரு தீவிர பிரச்னையாக உள்ளன” என்றார்.

டிசீஸ் எக்ஸ்:

நமக்கு தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்று சொல்லப்படுகிறது. கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்கு பரவினால் கொரோனாவை போல் பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த பாதிப்பு இணையாக இந்த புதிய தொற்று ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸை போலவே இந்த புதிய வைரஸும் தன்னுடைய வெவ்வேறு திர்ப்புகளை இயற்கையாகவே மாறுபாடு அடைந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...