பெய்ஜிங்கில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் நாள் இனிதே நிறைவுபெற்றது.
பெய்ஜிங் வாழ் தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.வண்ணமயமான பூஜை அலங்காரத்தின் நடுவே விநாயகப் பெருமான் அமர்ந்திருக்க, செழிப்பான கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரியக் கோலத்தின் மேல் பொங்கலை பொங்க வைத்து, பெண்கள் வட்டமாக வந்து கும்மியடித்து “பொங்கலோ பொங்கலைக்” கொண்டாடினர்.
குத்துவிளக்கு ஏற்றி, தமிழ் தாய் வாழ்த்துப் பாடி, இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய நிகழ்வானது அழகான முறையில் தொகுத்து வழங்கப்பட்டது.நிகழ்வானது, “பெய்ஜிங் சங்கத்தின்” குழுப் பாடல், பொங்கலைப் பற்றிய வினாடி வினா மற்றும் அதிர்ஷ்ட குலுக்கலுடன் இனிதே நிறைவடைந்தது.
“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற கூற்றுக்கு இணங்க அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.
செய்தியாளர்,
சி. தாமோதரன், இந்தியா.