மெல்பேர்ன் துறைமுகம் தொடர்பான போராட்டங்கள் காரணமாக அவுஸ்திரேலிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல நாட்களாகத் துறைமுகப் பணிகளைச் சீர்குலைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், துறைமுகத்தில் இருந்து சுமார் 50,000 பெரிய கொள்கலன்கள் அகற்றப்படவில்லை என்று விக்டோரியா சர்வதேச கொள்கலன் முனைய நிர்வாக அதிகாரி புருனோ போஸ்சிட்டோ கூறுகிறார்.
இஸ்ரேலிய கப்பல் உட்பட 8 கப்பல்களின் செயல்பாடுகள் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் கப்பல் உள்ளிட்ட கப்பல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.