Cinemaவிரைவில் கட்சி தொடங்க உள்ளார் நடிகர் விஜய்

விரைவில் கட்சி தொடங்க உள்ளார் நடிகர் விஜய்

-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் புயல் மழையால் இந்தியாவின் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25ம் திகதி திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

100 ஆசிரியர் அல்லாத வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ள NSW மாநிலம்

TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...

NSW-வில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் பலி

தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

Wood Heater புகையால் ஏற்படும் மரணங்கள் பற்றி வெளியான அறிக்கைகள்

குளிர்காலத்தில் ஆஸ்திரேலிய வீடுகளில் Wood Heater நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிலிருந்து வெளியாகும் புகை, சுகாதார எச்சரிக்கைகளையும், அண்டை வீட்டாருக்கு இடையே தகராறுகளையும் ஏற்படுத்துவதாகக்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

14 வினாடிகளுக்குப் பிறகு விழுந்து நொறுங்கிய ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான Eris, வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Bowen நகரத்திலிருந்து ஏவப்பட்ட 14 வினாடிகளில் விழுந்து நொருங்கியது. இந்த ராக்கெட் சோதனை விமானம்...

திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய மணமகன்

மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் படுகாயமடைந்துள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter Valley பகுதியில் உள்ள Mount View சாலையில் அவரும் அவரது...