Cinemaபண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல்

பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல்

-

பாடகி பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் இன்று 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானாா்.

நமக்கு மிகவும் பிடித்த பல பாடல்களைப் பாடிய அந்தக் குரல் நேற்று ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் என்று பாடலையும் இணைத்துள்ளார்.

முன்னதாக, மறைவு செய்தி கேட்டதும், கனிமொழி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், இசைக் கலைஞர் பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்.

புற்றுநோய் பாதித்து இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது உடல் வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரணி உடல் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது உடல் அங்கிருந்து இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் இன்று 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு திரையுலகத்தினரின் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டுருந்தது.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு மாலை இறுதிக் கிரியைகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...