Cinemaசர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் 'எமர்ஜென்சி' திரைப்படம்

சர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படம்

-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியுமுள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் வெளியிட்டுத்திகதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் பேசுகையில், ‘சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை எடுத்து இருக்கிறேன். எமர்ஜென்சி இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். ஒரு வரலாற்று நிகழ்வை படமாக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

இந்நிலையில் இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். படம் ரிலீசாகும்போது எதிர்ப்பை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கஞ்சா நிறைந்த மருந்துகள் உயிருக்கு ஆபத்தானவை!

ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) மற்றும் ஆஸ்திரேலிய மருந்தகக் குழு ஆகியவை 98% க்கும் அதிகமான THC (Tetrahydrocannabinol) உள்ளடக்கம் கொண்ட கஞ்சா அடிப்படையிலான மருந்துகளின்...

சமீபத்திய தரவரிசையில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் மேலும் சரிந்துள்ளது. 2025 ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆஸ்திரேலியர்கள் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இதன் மூலம்...

உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ள Antibiotics சிகிச்சைகள்

பாக்டீரியா நோய்களுக்கு எதிரான Antibiotics சிகிச்சைகளுக்கு எதிர்ப்பு உலகளவில் வேகமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் மக்களில் பொதுவான நிலைமைகளை ஏற்படுத்தும்...

உலகப் பட்டத்தை வென்ற மெல்பேர்ண் நகரம்

ஹாங்காங்கில் நடைபெற்ற 2025 உலக பயண விருதுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஒரு முக்கிய விருதை வென்றுள்ளது.Oceania’s Leading City Destination for 2025-இற்கான சிறந்த விருதை...