Newsசெல்லப்பிராணிகளுக்கு தனது சொத்துகளை எழுதி வைத்த மூதாட்டி

செல்லப்பிராணிகளுக்கு தனது சொத்துகளை எழுதி வைத்த மூதாட்டி

-

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்த லியூ எனும் மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான20 மில்லியன் யுவான் மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், பல பயனர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைத் தடுக்க Jetstar-இன் புதிய திட்டம்

விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக...

ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்). 18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு...

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...