மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக மெல்போர்னில் உள்ள ஒரு முன்னணி பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதிய தவணைக்கான பாடசாலைகள் நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும் பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த மின்னஞ்சலால் பாடசாலை ஆரம்பத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளி மாணவியை குறிவைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயற்சி நடப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் ஹிரா பள்ளிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்தவுடன், அதிபர் உள்ளிட்ட நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போலீஸ் ரோந்து தொடரும் என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இச்சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், இது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் செயலா என்பதை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விக்டோரிய பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.