காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை பேணுவது தற்போது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களின் நிதிகள் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
ஹமாஸ் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் திட்ட ஊழியர்கள் பலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுவரை உதவி வழங்கிய ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் தங்களது நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.
அந்த நிலையைக் கருத்திற் கொண்டு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.