Newsஅழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

அழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

-

இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தான் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த அழகுசாதனப்பொருட்களை தனது மாமியார் எடுத்து பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே தான் விவாகரத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை நடந்துள்ளதுடன் சில மாதங்களுக்குப் பின்னர் இது தற்போது விவாகரத்திற்கு வந்துள்ளது.

அடிக்கடி தனது அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் அவை சில நாட்களுக்குள் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் வெளியே செல்லும் போது அவற்றை பயன்படுத்த முடியாது போவதாகவும் அந்த பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...