Newsஇலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் விரிவடைந்து வருகின்றன

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் விரிவடைந்து வருகின்றன

-

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் இணைந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொனாக் ஆகியோருக்கும் இடையில் நேற்று இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பின் போது, ​​அமைச்சர் வோங், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை அன்புடன் வரவேற்றதுடன், உச்சிமாநாட்டில் இலங்கை அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் வோங், இந்து சமுத்திரப் பிராந்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக காஸா பகுதியில் இடம்பெறும் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக இலங்கை மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பில் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, அத்துறையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் ஈடுபாடு குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு திட்டத்தில் இருந்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை பிரதிபலித்த இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...