கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் புனே நகரின் வானில் கொசுக்கள் நடமாடுவதைக் காட்டும் காணொளி உலகம் முழுவதும் பரவியது.
சூறாவளியாக தோன்றிய இந்த அசாதாரண காட்சியை ‘கொசு Tornado’ என்று பலரும் அழைத்தனர்.
இந்த கொசுப்புயல் புனேவின் கேசவ்நகர் மற்றும் காரடி கௌடன் பகுதிகளில் வானத்தை அலங்கரித்தது.
புனே நகரின் ஊடாக பாயும் முத்தா நதியின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த அசாதாரண நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த கொசு தொல்லையால் சுகாதாரத்துறையினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக இந்த பகுதியில், புனே பணக்காரர்கள் வசிக்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மேலும் அவர்களால் தங்கள் ஆடம்பர வீடுகளின் பால்கனி கதவுகளை கூட திறக்க முடியவில்லை.
கேசவ்நகர் மற்றும் காரடி கவுடனில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் குடியிருப்பாளர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பல குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர் மற்றும் நிலைமை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.