அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு தம்பதியினர், தங்கள் மகளின் படுக்கையறையில் கொடிய விஷப் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பழுப்பு நிற பாம்பு வீட்டின் தொலைக்காட்சி பெட்டிக்கு அடியில் சுருண்டு கிடந்தது, பின்னர் மகளின் படுக்கையறைக்கு சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவி பெறும் வரை பெற்றோர்கள் தங்கள் மகளின் அறையின் கதவை மூடிவிட்டு துணிகளை வெளியில் குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு உலகில் உள்ள கொடிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, விலங்குகள் குளிர்ச்சியை தேடிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், மெல்போர்னில் உள்ள ஒரு தாய் தனது குழந்தையின் அலமாரியில் பழுப்பு நிற பாம்பை கண்டெடுத்தார்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, 2000 மற்றும் 2016 க்கு இடையில், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாம்புக்கடி தொடர்பான இறப்புகள் பழுப்பு நிற பாம்புகளால் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளது.