பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சண்டை அத்தீவின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. “பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார்.
பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும்
மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு முன் எங்கா மாகாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.