Newsஉயிரிழந்த நண்பனுக்காக 10 ஆயிரம் டொலர் டிப்ஸ்

உயிரிழந்த நண்பனுக்காக 10 ஆயிரம் டொலர் டிப்ஸ்

-

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள ‘ தி மேசன் ஜார் கஃபே’ எனும் உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டொலர் பில்லுக்கு டிப்ஸ் பிரிவில் 10 ஆயிரம் டொலரை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

பொதுவாக அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பில் தொகையில் 15% – 25% வரையிலேயே டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால், மார்க் 30,835% டிப்ஸாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மேலாளர், அவ்வாடிக்கையாளரிடம் சென்று, “டிப்ஸ் தொகையில் 10 ஆயிரம் டொலர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தவறுதலாக எழுதிவிட்டீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இல்லை. அந்தத் தொகையைத்தான் நான் டிப்ஸாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய நண்பர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன்” என்றார்.

Latest news

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக...

ஆஸ்திரேலியாவில் Temporary Migration விசா வைத்திருப்பவர்கள் பற்றி ஐ.நா. சிறப்பு அறிக்கை

அவுஸ்திரேலியாவில் உள்ள தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, சில முதலாளிகள் தற்காலிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புலம்பெயர்ந்தோர்...

இந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்களை மருந்துக்காக செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் இந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்களை மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவிற்கு செலவிட்டுள்ளனர். அவுஸ்திரேலியர்களின் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சட்டவிரோத போதைப்பொருள் பாவனை...

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

மலேசிய கோடீஸ்வரரான டி ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று (28) காலமானார். “நவம்பர் 28 அன்று அமைதியாக காலமான எங்கள் தலைவர் டி ஆனந்த...

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

மலேசிய கோடீஸ்வரரான டி ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று (28) காலமானார். “நவம்பர் 28 அன்று அமைதியாக காலமான எங்கள் தலைவர் டி ஆனந்த...

மெல்பேர்ணில் மிகவும் விலையுயர்ந்த வீடுகளைக் கொண்ட தெருக்களின் பட்டியல்

அவுஸ்திரேலியாவில் விலை உயர்ந்த வீடுகள் அமைந்துள்ள வீதி தொடர்பாக அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2021 முதல் இந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட...