ஜனவரி 2024க்குள், பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்னணி நாடுகளை YouTube பெயரிட்டுள்ளது.
அதன்படி, 462 மில்லியன் பயனர்களுடன் உலகிலேயே அதிக YouTube பார்வையாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 239 மில்லியன் YouTube பார்வையாளர்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும்,
144 மில்லியன் பயனர்களுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் 56.2 மில்லியன் இணைய பயனர்கள் YouTubeபைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தரவரிசைப்படி, ஜப்பான் 78.6 மில்லியன் பார்வையாளர்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
தெற்காசிய நாடான வங்கதேசத்தில் 33.6 மில்லியன் YouTube பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடாவில் முறையே 50 மில்லியன், 42 மில்லியன் மற்றும் 31 மில்லியன் YouTube பார்வையாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2023 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகில் அதிக எண்ணிக்கையிலான YouTube பயனர்களைக் கொண்ட நாடாக மாறியது, மேலும் நாட்டின் டிஜிட்டல் மக்கள்தொகையில் சுமார் 98 சதவீதம் பேர் இந்தச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.