Newsஆழ்கடல் பயணத்தில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி!

ஆழ்கடல் பயணத்தில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி!

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகையையும் இணைக்கக் கூடிய சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்துக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

Latest news

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் பலி

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த Potts Point-ஐ சேர்ந்த எண்பது...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...