கருக்கலைப்பு மருந்தான மைஃப் ப்ரிஸ்டோனை விற்பனை செய்ய அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய மருந்தக சங்கிலிகள் முடிவு செய்துள்ளன.
கருக்கலைப்பு சட்டபூர்வமான பல மாநிலங்களில் அடுத்த வாரம் மருந்துகளை விநியோகிக்கத் தொடங்கும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மருந்துக் கடைகளில் மாத்திரைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
2000 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் மாத்திரைகள் சட்டப்பூர்வமாக இருந்தாலும், அவை கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே கிடைக்கின்றன.
புதிய முடிவின்படி, நியூயார்க், பென்சில்வேனியா, மசாசூசெட்ஸ், கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் உள்ள பல மருந்தகங்கள் இந்த மாத்திரைகளை வழங்கத் தொடங்கும்.
சில்லறை மருந்தகம் மூலம் மாத்திரை கிடைக்கும் அதே வேளையில், மருந்துச் சீட்டில் மருந்தாளரிடமிருந்தும் பெறலாம்.
கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்கள் இந்த மருந்தின் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க சந்தையில் இருந்து அதை நீக்கவும் வழக்கு தொடர்ந்தன.