NewsOpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

OpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

-

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இலாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக நடவடிக்கைகளில் ஓபன்ஏஐ ஈடுபட்டு வருவதாக எலான் வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

OpenAI உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறான பாதையில் தற்போது பயணிப்பதாக எலான், தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

OpenAI கடந்த ஆண்டு வெளியிட்ட சாட் ஜிபிடி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 3.5-வது வெர்சன் வரை பயனர்களுக்கு இலவச சேவையை அனுமதித்த OpenAI சாட் ஜிபிடி-4 வர்சனுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது.

இந்தியாவில் தற்போதைக்கு 1,650 பேர் கட்டணச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் பின்னணியில் மற்றுமொரு கதையும் குறிப்பிடப்படுகிறது. எலான் மஸ்க் OpenAI நிறுவனத்தை டெஸ்லாவுடன் இணைக்க முயன்றதாகவும் ஆல்ட்மேன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...